புலம் பெயரும் வனவிலங்கு இனங்களின் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் (CMS) கீழ், வரிக் கழுதைப்புலிகளை இணைப்பு I மற்றும் II-இல் சேர்க்க தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகள் முன்மொழிந்துள்ளன.
இந்த முன்மொழிவு, CMS அமைப்பின் பங்குதார நாடுகளின் 15வது மாநாட்டில் (COP15) விவாதிக்கப் படும்.
இந்தக் கூட்டம் 2026 ஆம் ஆண்டு மார்ச் 23 முதல் 29 ஆம் தேதி வரை பிரேசிலின் காம்போ கிராண்டேவில் நடைபெறவுள்ளது.
இணைப்பு I கடுமையான பாதுகாப்பு தேவைப்படும் அருகி வரும் நிலையில் உள்ள புலம்பெயர்ந்த இனங்களை உள்ளடக்கியது.
இணைப்பு II பாதுகாப்பிற்கு சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படும் இனங்களை உள்ளடக்கியது.
வரிக் கழுதைப்புலி, IUCN செந்நிறப் பட்டியலில் 'அச்சுறுத்தல் நிலையை அண்மித்த' இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.