வருகையின் போது மின்னணு நுழைவு இசைவு - மதுரை விமான நிலையம்
October 21 , 2018 2516 days 878 0
மதுரை சர்வதேச விமான நிலையத்தில் வருகையின் போதான மின்னணு நுழைவு இசைவு வசதி (Visa - விசா) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வசதியைப் பெறும் தமிழ்நாட்டின் நான்காவது மற்றும் ஒட்டுமொத்த அளவில் இந்தியாவின் 26 வது விமான நிலையமாகும்.
முன்பு பயணிகள் தங்கள் வேலை முடிவதற்கு சம்பந்தப்பட்ட நாடுகளின் இந்திய உயர் ஆணையத்திற்குச் செல்ல வேண்டி இருந்தது.
பயணிகள் தற்போது தங்களது பயணத்திற்கு குறைந்தபட்சம் நான்கு நாட்களுக்கு முன்பாகவும் அதிகபட்சம் 120 நாட்களுக்கு முன்பாகவும் நேரடியாக இணைய தளத்தில் விசாவை விண்ணப்பிக்க முடியும்.