TNPSC Thervupettagam

வருடாந்திர அணுசக்திப் பட்டியல் பரிமாற்றம் 2026

January 5 , 2026 2 days 49 0
  • 2026 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் தங்கள் அணுசக்தி நிறுவல்களின் பட்டியல்களைப் பரிமாறிக் கொண்டன.
  • அணுசக்தி நிறுவல்கள் மற்றும் மையங்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தடை செய்வதற்கான ஒப்பந்தத்தின் கீழ் இந்தப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
  • இந்த ஒப்பந்தம் 1988 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியன்று கையெழுத்திடப்பட்டு, 1991 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதியன்று அமலுக்கு வந்தது.
  • நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கையாக இந்த இரு நாடுகளும் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 01 ஆம் தேதியன்று இந்தப் பட்டியல்களைப் பரிமாறிக் கொள்கின்றன.
  • இந்தப் பரிமாற்றம் புது டெல்லி மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசுமுறை வழி முறைகள் மூலம் நடத்தப்பட்டது.
  • 2008 ஆம் ஆண்டின் தூதரக அணுகல் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவும் பாகிஸ்தானும் கைதிகளின் பட்டியல்களைப் பரிமாறிக் கொண்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்