வருடாந்திர கல்வி நிலை அறிக்கை(Annual Status of Education Report)
August 5 , 2017 3037 days 1421 0
பிரதம் (PRATHAM) என்னும் தன்னார்வ அரசு சாரா நிறுவனம் இந்த வருடாந்திர கல்வி நிலை அறிக்கையினை வெளியிடுகிறது.
இந்த வருடாந்திர கல்வி நிலை அறிக்கை கணக்கெடுப்பில், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது கிராமப்புறங்களில் இருக்கும் வீடுகளை (குடும்பங்களை) மட்டும் உள்ளடக்கும் கணக்கெடுப்பு ஆகும் .
ஆரம்ப நிலைக் கல்வியில், ஒவ்வொரு வகுப்பின் கற்றல் ஆக்கங்களை இந்த அறிக்கை காட்டுகிறது .மொழிப் பாடம் , கணிதம், சுற்றுச்சூழல் கல்வி, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற பாடங்களின் அடிப்படையில் கற்றல் வெளிப்பாடு கணக்கிடப்படுகிறது.
அனைத்துக் குழந்தைகளுக்கும் தகுந்த கல்வி, தரமாக கிடைக்க இந்த அறிக்கை வழிகாட்டுகிறது.
கல்வித் திட்டங்களை செயல்படுத்துவதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த அறிக்கையானது பெரிதும் உதவுகின்றன.