TNPSC Thervupettagam

வருடாந்திர தொழிலாளர் சக்தி ஆய்வு (2019-2020)

August 16 , 2021 1453 days 581 0
  • இது தேசியப் புள்ளியியல் அலுவலகத்தினால் 2017 ஆம் ஆண்டில் கணினியால் எடுக்கப் பட்ட இந்தியாவின் முதன் முதலான ஒரு ஆய்வாகும்.
  • இதில் 2019-20 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர தொழிலாளர் சக்தி ஆய்வின் முக்கியத் தகவல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
  • 2017-18 மற்றும் 2019-20 ஆகிய காலக்கட்டத்தின் இடையில் வேலைவாய்ப்பின்மை வீதத்தில் ஏற்பட்ட சரிவு மற்றும் தொழிலாளர் சக்தி பங்கேற்பு வீதத்தில் ஏற்பட்ட உயர்வு ஆகியவற்றின் நம்பகத் தன்மையைக் காட்டும் முழு நீளத் தகவல்ககளை இந்த ஆய்வறிக்கை வழங்குகிறது.
  • மேலும் வழக்கமான வேலைவாய்ப்பின்மை வீதத்தில் ஏற்பட்ட சரிவானது 2017-18 ஆம் ஆண்டில் 6.1% ஆகவும், 2018-19 ஆம் ஆண்டில் 5.8% ஆகவும் மேலும் 2019-20 ஆம் ஆண்டில் 4.8% ஆகவும் இருந்ததாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
  • 36.9% ஆக இருந்த நாட்டின் தொழிலாளர் சக்தியானது மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் 37.5% ஆகவும், பின்பு 2019-20 ஆம் ஆண்டில் அது 40.1% ஆகவும் உயர்ந்துள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
  • பொருளாதாரத்தின் மெய்வளர்ச்சி விகிதமானது 7 சதவீதத்திலிருந்து 4.2% ஆக சரிந்த காலக்கட்டத்தின் மத்தியில் இது போன்ற நேர்மறையான போக்குகள் ஏற்பட்டுள்ளன.
  • இதன்மூலம், கடந்த காலங்களில் வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி எனும் முரண்பாட்டு நிலையிலிருந்து வளர்ச்சியற்ற வேலைவாய்ப்பு’ எனும் முழு வட்டத்திற்குள் இந்தியா நுழைந்துள்ளதாகத் தெரிகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்