TNPSC Thervupettagam

வருடாந்திர நிலத்தடி நீர் தரம் குறித்த அறிக்கை 2025

December 2 , 2025 11 days 85 0
  • மத்திய நிலத்தடி நீர் வாரியம் (CGWB) ஆனது 2025 ஆம் ஆண்டு வருடாந்திர நிலத்தடி நீர் தரம் குறித்த அறிக்கையை வெளியிட்டது.
  • இந்தியாவின் நிலத்தடி நீரில் சுமார் 71.7% ஆனது இந்தியத் தரநிலைகள் வாரியத்தின் (BIS) வரம்புகளைப் பூர்த்தி செய்கிறது, அதே நேரத்தில் 28.3% மாதிரிகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அளவுருக்களுக்கான வரம்புகளை மீறுகின்றன.
  • சுமார் 20% மாதிரிகளில் கண்டறியப்பட்டதுடன் நைட்ரேட் மாசு மிகவும் பரவலான மாசுபாடு ஆக உள்ளது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து ஃப்ளோரைடு மற்றும் உப்புத் தன்மை மாசு காணப்படுகிறது.
  • பெரும்பாலும் பஞ்சாப், ஹரியானா மற்றும் டெல்லியில் பருவமழைக்கு முந்தையதாக பெறப் பட்ட 6.71% மாதிரிகளிலும், பருவமழைக்குப் பிந்தையதாக பெறப்பட்ட 7.91% மாதிரிகளிலும் யுரேனியமானது மாசுபாடு பாதுகாப்பான வரம்புகளுக்கு மேல் (30 ppb) உள்ளதாகக் கண்டறியப்பட்டது.
  • சுமார் 94.3% மாதிரிகள் "சிறந்த வகை"யில் உள்ளதுடன், நிலத்தடி நீர் பெரும்பாலும் பாசனத்திற்கு ஏற்றதாக உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்