TNPSC Thervupettagam

வருடாந்திரக் காவிரி நீர் திறப்பு

May 5 , 2024 14 days 91 0
  • நடப்பு நீர் அளவீட்டு ஆண்டு 2023-24 ஆனது இம்மாதத்துடன் முடிவடையும் நிலையில், இந்த ஆண்டில் மாநில அரசினால் திறக்கப்பட உள்ள ஒட்டுமொத்த நீரின் அளவானது 1974 ஆம் ஆண்டிலிருந்து 2016-17 ஆம் ஆண்டின் போது வெளியிடப்பட்ட 69 ஆயிரம் மில்லியன் கன அடி என்ற மிகக் குறைந்த அளவிற்கு சிறிது அதிகமாக இருக்கும்.
  • ஏப்ரல் 30 ஆம் தேதியன்றான நிலவரப்படி, 2023 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் தேதி முதல் மொத்த நீர் வரத்து சுமார் 78.8 ஆயிரம் மில்லியன் கன அடியாகும்.
  • இது 2003-04 ஆம் ஆண்டில் பதிவான 75.6 ஆயிரம் மில்லியன் கன அடியை விட சற்று அதிகமாக இருந்தது.
  • அனைத்து சாத்தியக் கூறுகளிலும், நடப்பு நீர் அளவீட்டு ஆண்டு ஆனது, தமிழக மாநிலத்திற்கு 100 ஆயிரம் மில்லியன் கன அடிக்கு மிகாமல் காவிரி நீர் வழங்கப்பட்ட மூன்றாவது சந்தர்ப்பத்தைக் குறிக்கும்.
  • 2000 ஆம் ஆண்டிலிருந்து, மேலும் இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கான வருடாந்திரப் பங்கு 100 ஆயிரம் மில்லியன் கன அடியை மிகவும் சிறு வித்தியாசத்தில் தாண்டியது.
  • 2012-13 ஆம் ஆண்டில் 100.4 ஆயிரம் மில்லியன் கன அடியாகவும், 2002-03 ஆம் ஆண்டில் 109.9 ஆயிரம் மில்லியன் கன அடியாகவும் வழங்கப்பட்டது.
  • காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான கர்நாடகாவின் வாதத்தின் படி, 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் 50 ஆண்டு காலம் 1974 ஆம் ஆண்டில் முடிவடைந்தது.
  • 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 75% உபரி நீரும், கர்நாடகாவுக்கு 23% நீரும் கிடைக்கப்பெறும்.
  • மீதமுள்ள நீர் கேரளாவுக்கு வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்