வருடாந்திரத் தொழிலாளர் வளக் கணக்கெடுப்பு - ஏப்ரல் 2025
May 19 , 2025 47 days 143 0
இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதமானது 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 5.1% ஆக இருந்ததாக முதலாவது மாதாந்திர காலகட்ட அடிப்படையிலான தொழிலாளர் வளக் கணக்கெடுப்பு (PLFS) தெரிவித்துள்ளது.
இது புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தினால் வெளியிடப் பட்டது.
இதுவரையில், இத்தகையக் கணக்கெடுப்புகளானது காலாண்டு அல்லது வருடாந்திர அடிப்படையில் நடத்தப்பட்டன.
இப்புதுப்பிக்கப்பட்ட PLFS கணக்கெடுப்பில், கிராமப்புறங்களில் இருந்து பெறப்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மைத் தரவுகளும் அடங்கும்.
இதில் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது ஆண்களிடையே சுமார் 5.2% ஆகவும், பெண்களிடையே 5% ஆகவும் சற்று அதிகமாகவே இருந்தது.
நாடு முழுவதும் 15 முதல் 29 வயதிற்குட்பட்டவர்களிடையே வேலைவாய்ப்பின்மை விகிதம் 13.8% ஆக இருந்தது.
நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 17.2% ஆகவும், கிராமப்புறங்களில் 12.3% ஆகவும் இருந்தது.
நாடு முழுவதும், 15 முதல் 29 வயதிற்குட்பட்ட பெண்களிடையே வேலைவாய்ப்பின்மை விகிதம் (UR) 14.4% ஆக இருந்தது (கிராமப்புறம் + நகர்ப்புறம்).
இது நகர்ப்புறங்களில் 23.7% ஆகவும், கிராமப்புறங்களில் 10.7% ஆகவும் இருந்தது.