TNPSC Thervupettagam

வருடாந்திரத் தொழிலாளர் வளக் கணக்கெடுப்பு - ஏப்ரல் 2025

May 19 , 2025 16 hrs 0 min 37 0
  • இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதமானது 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 5.1% ஆக இருந்ததாக முதலாவது மாதாந்திர காலகட்ட அடிப்படையிலான தொழிலாளர் வளக் கணக்கெடுப்பு (PLFS) தெரிவித்துள்ளது.
  • இது புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தினால் வெளியிடப் பட்டது.
  • இதுவரையில், இத்தகையக் கணக்கெடுப்புகளானது காலாண்டு அல்லது வருடாந்திர அடிப்படையில் நடத்தப்பட்டன.
  • இப்புதுப்பிக்கப்பட்ட PLFS கணக்கெடுப்பில், கிராமப்புறங்களில் இருந்து பெறப்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மைத் தரவுகளும் அடங்கும்.
  • இதில் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது ஆண்களிடையே சுமார் 5.2% ஆகவும், பெண்களிடையே 5% ஆகவும் சற்று அதிகமாகவே இருந்தது.
  • நாடு முழுவதும் 15 முதல் 29 வயதிற்குட்பட்டவர்களிடையே வேலைவாய்ப்பின்மை விகிதம் 13.8% ஆக இருந்தது.
  • நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 17.2% ஆகவும், கிராமப்புறங்களில் 12.3% ஆகவும் இருந்தது.
  • நாடு முழுவதும், 15 முதல் 29 வயதிற்குட்பட்ட பெண்களிடையே வேலைவாய்ப்பின்மை விகிதம் (UR) 14.4% ஆக இருந்தது (கிராமப்புறம் + நகர்ப்புறம்).
  • இது நகர்ப்புறங்களில் 23.7% ஆகவும், கிராமப்புறங்களில் 10.7% ஆகவும் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்