இந்தியக் கடற்படை மற்றும் பிரான்சு நாட்டுக் கடற்படை ஆகிய இரண்டிற்குமிடையே மேற்கொள்ளப்படும் 20வது இருதரப்புக் கடற்படைப் பயிற்சியான வருணா பயிற்சி 2022 ஆம் ஆண்டு மார்ச் 30 முதல் ஏப்ரல் 03 வரையில் அரபிக்கடலில் நடத்தப்பட்டது.
இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே மேற்கொள்ளப்படும் இந்த இருதரப்புக் கடற்படைப் பயிற்சியானது 1993 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தப் பயிற்சிக்கு 2001 ஆம் ஆண்டில் வருணா எனப் பெயரிடப்பட்டது.