TNPSC Thervupettagam

வருமான வரி தினம் 2026 - ஜூலை 24

July 25 , 2026 3 days 100 0
  • 1860-ஆம் ஆண்டில் இந்தியாவில் வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டதை நினைவு கூரும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • 1857-ஆம் ஆண்டு பெரும் புரட்சிக்குப் பிறகு, பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் நிதி உறுப்பினரான சர் ஜேம்ஸ் வில்சன் என்பவரால் வருமான வரி அறிமுகப்படுத்தப் பட்டது.
  • இந்தியாவில் வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டு 150 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) 2010 ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக வருமான வரி தினத்தை அனுசரித்து வருகிறது.
  • வரிச் சட்டங்களை எளிமையாக்குவதற்கும் வரி செலுத்துவோரின் வசதியை மேம்படுத்துவதற்கும், வருமான வரிச் சட்டம், 1961-ஐ மாற்றி, வருமான வரிச் சட்டம், 2025 ஆனது 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று நடைமுறைக்கு வந்தது.
  • 167-வது வருமான வரி தினம் (2026) என்பது, வருமான வரிச் சட்டம், 2025 அமல்படுத்தப் பட்ட பிறகு நடைபெறும் முதல் கொண்டாட்டமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்