கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வரையாட்டுமுடி, அழிந்துவரும் நிலையில் உள்ள வரையாடுகளின் (நீலகிரி தார்) முக்கிய வாழ்விடமாக உருவெடுத்துள்ளதுடன், அதன் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
வாழ்விடம் மறுசீரமைப்பு முயற்சிகளுக்குப் பிறகு வரையாடுகளின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் சுமார் 50 ஆக இருந்த நிலையில் தற்போது 150 ஆக உயர்ந்துள்ளது.
அந்நிய ஆக்கிரமிப்புத் தாவரங்களை அகற்றி, இயற்கை புல்வெளிகளை மீட்டெடுப்பதன் மூலம் 22.5 ஹெக்டேர் பரப்பளவில் கேரள வனத்துறை சூழலியல் மறுசீரமைப்புப் பணிகளை நிறைவு செய்துள்ளது.
இப்பகுதியின் புல்வெளிகள், சோலை காடுகள், பாறை முகடுகள் மற்றும் குளிர்ந்த பருவநிலை ஆகியன இந்த இனத்திற்கு பொருத்தமான வாழ்விடத்தை வழங்குகின்றன.
வனத்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதுடன், பாதுகாப்பிற்கு ஆதரவளிப்பதற்கும் உள்ளூர் பழங்குடியினச் சமூகங்களுக்கு நிலையான வாழ்வாதாரங்களை வழங்குவதற்கும் ஒரு சூழலியல் சுற்றுலா மலையேற்றத் திட்டத்தையும் முன்மொழிந்துள்ளது.