TNPSC Thervupettagam

வரைவு விதைகள் மசோதா 2025

November 20 , 2025 8 days 66 0
  • விதைகள் சட்டம் (1966) மற்றும் விதைகள் கட்டுப்பாட்டு ஆணை (1983) ஆகியவற்றிற்குப் பதிலாக விதைத் தரம், ஒழுங்குமுறை மற்றும் கண்டறியும் தன்மைக்கான நவீனக் கட்டமைப்பினை அறிமுகப்படுத்துவதை இந்த வரைவு விதை மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சாகுபடி மற்றும் பயன்பாட்டிற்கான மதிப்பு (VCU) சோதனைகளின் அடிப்படையில் விதை வகைகளின் கட்டாயப் பதிவை இந்த மசோதா அறிமுகப்படுத்துகிறது மற்றும் அனைத்து விதைகளுக்கும் QR அடிப்படையிலான டிஜிட்டல் கண்காணிப்பு தேவைப் படுகிறது.
  • விவசாயிகள் ஒரு தயாரிப்புப் பெயரின் கீழ் மட்டுமே வேளாண் நிலத்தில் சேமிக்கப்பட்ட விதைகளைச் சேமிக்க, பயன்படுத்த, மீண்டும் விதைக்க, பரிமாற்றம் செய்ய மற்றும் விற்க உரிமையை கொண்டிருக்கிரார்கள் என்ற நிலையில் மேலும் அவர்களுக்கு அபராதங்களிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
  • இந்த மசோதாவானது, விதைத் தரத் தரநிலைகள், சான்றிதழ் நிறுவனங்கள் மற்றும் சோதனை ஆய்வகங்களை வலுப்படுத்துகிறது மற்றும் மாதிரிகள் சேகரித்தல் மற்றும்  பறிமுதல் செய்வதற்கான ஆய்வாளர்களுக்கு மிகவும் தெளிவான அதிகாரங்களை வழங்குகிறது.
  • பற்றாக்குறை அல்லது இலாபம் ஈட்டும் சூழலின் போது விதை விலை சார்ந்த ஒழுங்கு முறைக்கான விதிகளுடன், தரப்படுத்தப்பட்ட அபராத முறை அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்