பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட் (BRBNMPL - Bharatiya Reserve Bank Note Mudran Private Limited) என்ற நிறுவனமானது கர்நாடகாவின் மைசூரு நகரில் "வர்னிகா" என்ற மை உற்பத்தி அலகு ஒன்றை நிறுவியுள்ளது.
இது ஆண்டுக்கு 1,500 மெட்ரிக் டன் மையினைத் தயாரிக்கும் திறன் கொண்டதாகும்.
இதன் மூலம் ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பை அதிகரிக்க முடியும்.
BRBNMPL என்பது முழுவதும் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான ஒரு துணை நிறுவனம் ஆகும்.
சக்தி காந்த தாஸ் அவர்கள் (ரிசர்வ் வங்கியின் ஆளுநர்) இந்த மை உற்பத்திப் பிரிவைத் தொடங்கி வைத்தார்.
இது ‘மேக் இன் இந்தியா’ முன்னெடுப்பிற்கான ஓர் ஊக்கமாக அமையும்.