TNPSC Thervupettagam

வர்த்தக முத்திரைப் பதிவுகள் 2024–25

January 2 , 2026 6 days 66 0
  • இந்தியாவில் ஓராண்டில் இதுவரை பதிவாகாத வகையில் அதிகபட்சமாக 2024–25 ஆம் நிதியாண்டில் 5.5 லட்சத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு வர்த்தக முத்திரைகள் பதிவு செய்யப் பட்டன.
  • இந்தத் தகவலை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.
  • இந்த உயர்வு இந்தியாவில் வேகமான மற்றும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட அறிவுசார் சொத்துரிமை (IP) பதிவு செயல்முறைகளைப் பிரதிபலிக்கிறது.
  • இயங்கலை வழி தாக்கல், விரைவான பரிசோதனை மற்றும் குறைக்கப்பட்ட நிலுவைத் தொகை ஆகியவை அதிக பதிவுகளுக்கு ஆதரவாக அமைந்தன.
  • அதிக எண்ணிக்கையிலான தாக்கல்கள் மருந்து, கால்நடை மற்றும் சுகாதாரத் துறைகளில் பதிவாகின.
  • இந்தியாவில் வர்த்தக முத்திரைப் பாதுகாப்பு ஆனது 10 ஆண்டு செல்லுபடியாவதுடன், காலவரையின்றி புதுப்பிக்கத்தக்க தன்மையுடன் கூடிய 1999 ஆம் ஆண்டு வர்த்தக முத்திரைச் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்