வர்த்தகப் பிரச்சனைகளை விரைவாகத் தீர்ப்பதற்கான சட்டதிருத்தம்
August 15 , 2018 2534 days 742 0
மாநிலங்களவை ஆகஸ்ட் 10, 2018 அன்று வர்த்தகங்களுக்கான நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றத்தின் வர்த்தகங்களுக்கான பிரிவு மற்றும் வர்த்தக மேல்முறையீட்டுப் பிரிவு (திருத்த) மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதா மாநில அரசுகள்
உயர்நீதி மன்றங்கள் அசல் உரிமையியல் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளிலும் கூட மாவட்ட அளவில் வர்த்தகங்களுக்கான நீதிமன்றங்களை அமைக்கவும்,
உயர்நீதிமன்றத்தின் அசல் அதிகார வரம்பிற்கு உட்படாத பகுதிகளில் கூட மாவட்ட அளவில் வர்த்தகங்களுக்கான மேல்முறையீட்டு நீதிமன்றங்களை அமைக்கவும்
அனுமதியளிக்கிறது
இந்த திருத்தமானது வர்த்தகங்களுக்கான நீதிமன்றத்தின் பண மதிப்பு எல்லையை ரூ.1 கோடியில் இருந்து ரூ.3 லட்சமாக குறைத்துள்ளது.
இது குறைந்த மதிப்புள்ள வர்த்தக சிக்கல்களை தீர்ப்பதற்கான கால அளவை (தற்போது 1445 நாட்கள்) குறைக்கும் மற்றும் எளிதாக வர்த்தகம் செய்யக் கூடிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் தரவரிசையை உயர்த்தும்.