வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டம்
September 14 , 2019 2152 days 798 0
வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார்.
இது ஆண்டு வருமானம் ரூ 1.5 கோடிக்கு மிகாமல் இருக்கும் கடைக்காரர்கள் / சில்லறை வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான ஒரு தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும்.
இது 18 வயது முதல் 40 வயது வரையில் உள்ளவர்களுக்கான ஒரு திட்டமாகும். இவர்கள் 60 வயதை எட்டும்போது மாதந்தோறும் குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியமாக ரூ 3,000 வழங்கப்படும்.
மாதாந்திர ஓய்வூதியப் பங்களிப்பில் 50% நிதியை மத்திய அரசு வழங்கும். மீதமுள்ள 50% நிதியானது பயனாளியால் வழங்கப்படும்.