TNPSC Thervupettagam

வலசை போகும் பூநாரைகள் – தமிழ்நாடு

June 14 , 2026 15 hrs 0 min 47 0
  • தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள உப்பளங்களில் வலசை போகும் பூநாரைகள் பெரிய கூட்டங்களாகக் காணப்படுவதோடு வலசையின் போது அவை இப்பகுதியை உணவு உண்ணும் மற்றும் ஓய்வெடுக்கும் வாழ்விடமாகப் பயன்படுத்துகின்றன.
  • உயரமான, இளஞ்சிவப்பு நிற நீர்வாழ் பறவைகளான பூநாரைகள் பெரிய குழுக்களாக வாழ்கின்றன, மேலும் ஈரநிலங்கள் மற்றும் கடலோர வாழ்விடங்களில் அவற்றின் உயர்ந்த சமூக நடத்தைக்காக அறியப்படுகின்றன.
  • அவை ஆழமற்ற உப்பு ஏரிகள், உப்பளங்கள், சேற்றுப் பகுதிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் கடலோரக் காயல்களில் காணப்படுகின்றன. இந்தியாவில், இவை முக்கியமாக குஜராத் மற்றும் தெற்கு ஈரநிலங்களுக்கு இடையே வலசை போகின்றன.
  • இந்தியாவில் பெரிய பூநாரை (ஃபோனிகோப்டெரஸ் ரோசியஸ்) மற்றும் சிறிய பூநாரை (ஃபோனிகோனையாஸ் மைனர்) ஆகிய இரண்டு வகையான பூநாரைகள் உள்ளன.
  • பெரிய பூநாரை அதிகளவில் காணப்படுவதால் IUCN பட்டியலில் 'தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்' என வகைப்படுத்தப் பட்டுள்ளது அதேசமயம் அதிகரிக்கும் சுற்றுச்சூழல் அழுத்தங்கள் காரணமாக சிறிய பூநாரை 'அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம்' எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில், இரு உயிரினங்களும் முக்கியமாக குஜராத்தின் கிரேட் ரான் ஆஃப் கட்ச் பகுதியில் இனப்பெருக்கம் செய்கின்றன, பின்னர் உணவளிப்பதற்கும் மற்றும் குளிர் காலத்தை கழிப்பதற்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் உள்ள ஈரநிலங்களுக்கு வலசை வருகின்றன.
  • அவை வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-இல் அட்டவணை II-இன் கீழ் பாதுகாக்கப் படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்