உலகளாவிய மதிப்பீட்டின்படி, பல சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள் காரணமாக உலகின் 3,380 வலசைப்போகும் பறவையினங்களில் பாதிக்கும் மேற்பட்டவை குறைந்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
வாழ்விட இழப்பு, ஆக்கிரமிப்பு இனங்கள், வேட்டையாடுதல், பூச்சிக்கொல்லி பயன்பாடு, கட்டடங்களில் மோதுதல் மற்றும் மீன்பிடி வலைகளில் தற்செயலாக சிக்குதல் ஆகியவை முக்கிய அச்சுறுத்தல்களில் அடங்கும்.
வலசைப்போகும் பறவைகள் அவற்றின் இனப்பெருக்கம், வலசைப்போதல் மற்றும் உயிர்வாழ்வதற்கு வெவ்வேறு நாடுகளில் உள்ள ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட வாழ்விடங்களைச் சார்ந்துள்ளன.
இனப்பெருக்கம் செய்யும் இடங்கள், வலசைப்போகும் பாதைகள் மற்றும் இனப் பெருக்கம் அல்லாத வாழ்விடங்கள் முழுவதும் பறவைகளைப் பாதுகாக்க ஒரு முழுமையான வருடாந்திர சுழற்சிப் பாதுகாப்பு அணுகுமுறையை அறிவியலாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கண்காணிப்பு சாதனங்கள், மரபணு ஆய்வுகள், தானியங்கி கண்காணிப்பு மற்றும் குடிமக்கள் அறிவியல் சார்ந்த திட்டங்கள் போன்ற மேம்பட்ட கருவிகள் பறவை பாதுகாப்பு முயற்சிகளுக்கு உதவுகின்றன.