வலிப்பு நோய்க் கட்டுப்பாட்டுக்கான உலகின் முதல் மூளை உள்வைப்பு கூறு
July 6 , 2024 396 days 336 0
ஐக்கியப் பேரரசினைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது வலிப்பு நோயின் தாக்கங்களைக் கட்டுக்குள் கொண்டு வர உதவும் வகையில் மூளை உள்வைப்பு சாதனம் பொருத்தப்பட்ட உலகின் முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
உள்ளார்ந்த மூளை செயல்பாடு தூண்டுதல் (DBS) சாதனம் ஆனது மின் சமிக்ஞைகளை மூளைக்குள் ஆழமாக அனுப்புகிறது என்பதோடு இது இவரின் பகல்நேர வலிப்புத் தாக்கங்களை 80% அளவிற்கு குறைக்கிறது.
நியூரான் தூண்டுவிப்பானானது அசாதாரணமான வலிப்புத் தாக்கத்தை ஏற்படுத்தும் சமிக்ஞைகளைச் சீர்குலைக்க அல்லது தடுப்பதற்காக மூளைக்கு நிலையான மின் தூண்டுதல்களை வழங்குகிறது.
இந்த நோயின் தன்மை மீண்டும் மீண்டும் வலிப்பு வரும் நிலையாகும்.
இந்தியாவில், 1,000 பேருக்கு சுமார் 3 முதல் 11.9 பேர் வரை வலிப்பு நோயால் பாதிக்கப் படுகின்றனர்.