TNPSC Thervupettagam

வலிமையான புவி காந்தப் புயல் 2025

November 11 , 2025 7 days 83 0
  • புவியானது, G5 நிகழ்வாக வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆண்டின் வலிமையான புவி காந்தப் புயலை எதிர் கொண்டு வருவதாக நாசா உறுதிப்படுத்தியது.
  • புவியை அடைவதற்கு முன்பு ஒரு பெரிய பிளாஸ்மா அலையில் இணைந்த சூரிய வெப்ப உமிழ்வுகள் (CMEs) எனப்படும் பல சூரிய வெடிப்புகளால் இந்தப் புயல் தூண்டப் பட்டது.
  • இந்த நிகழ்வு ஆனது வடக்கு ஐரோப்பா, கனடா, அமெரிக்கா மற்றும் ஐக்கியப் பேரரசு முழுவதும் பரவலான துருவ மின்னொளி (அரோரா) காட்சிகளை ஏற்படுத்தியது.
  • அறிவியலாளர்கள், புவியின் வளைய மின்னோட்டக் (Disturbance Storm Time-Dst) குறியீட்டில் கூர்மையான வீழ்ச்சியைக் கவனித்தனர், இது அதிகப் புவி காந்தச் செயல்பாட்டைக் குறிக்கிறது.
  • இந்தப் புயல், 2003 ஆம் ஆண்டின் "ஹாலோவீன் புயல்கள்" போலவே செயற்கைக் கோள் தகவல் தொடர்பு, GPS அமைப்புகள் மற்றும் மின் பகிர்மானக் கட்டமைப்புகளில் இடையூறினை ஏற்படுத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்