புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI), “Delivering Prosperity at Scale: India’s Economic Transformation through the SDGs” என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்டது.
இது பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் இந்தியாவின் முன்னேற்றத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இது உள்ளடக்கிய வளர்ச்சி, வேலை வாய்ப்பு உருவாக்கம், உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் நிலையான பொருளாதாரக் கொள்கைகளில் கவனம் செலுத்துகிறது.
நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDGs) தேசியத் திட்டமிடல் மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகளில் எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்பதை இந்த அறிக்கை காட்டுகிறது.