TNPSC Thervupettagam

வளரிளம் பருவத்தினரின் ஆரோக்கியம் குறித்த WHO அறிக்கை

November 15 , 2026 6 hrs 0 min 43 0
  • 'தி லான்செட் குளோபல் ஹெல்த்' (The Lancet Global Health) இதழில் வெளியிடப்பட்ட உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆய்வு, வளரிளம் பருவத்தினரிடையே பரவலான உடல் உழைப்பின்மை இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
  • 389 ஆய்வுகளைப் பயன்படுத்தி, 140 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 11–17 வயதுடைய 3.2 மில்லியனுக்கும் அதிகமான வளரிளம் பருவத்தினரை உள்ளடக்கி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  • சுமார் 25% பேர் (240 மில்லியன்) ஒரு நாள் கூட குறைந்தபட்சம் 60 நிமிட உடல் செயல்பாடுகளில் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளனர்; வளரிளம் பருவத்தினர் வாரத்திற்குச் சராசரியாக 2.7 நாட்கள் மட்டுமே சுறுசுறுப்பாக உள்ளனர்.
  • முந்தைய வாரத்தின் ஏழு நாட்களிலும் குறைந்தபட்சம் 60 நிமிட உடல் செயல்பாடுகளை 14% பேர் மட்டுமே மேற்கொண்டுள்ளனர்.
  • சிறுவர்களை விட (22%) சிறுமிகளிடம் (28%) உடல் உழைப்பின்மை அதிகமாக இருந்தது; தினசரி உடல் செயல்பாடு அளவு சிறுமிகளிடம் 11% ஆகவும், சிறுவர்களிடம் 17% ஆகவும் இருந்தது.
  • உலகளாவிய உடல் செயல்பாடு அளவுகள் 15 ஆண்டுகளாக எவ்வித மாற்றமும் இன்றி ஒரே நிலையில் உள்ளன; வழக்கமான உடற்பயிற்சியானது இதய நோய்கள், வகை 2 நீரிழிவு நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்