சாவில்ஸின் 'வளர்ச்சி மையங்கள் குறியீட்டில்', 2035 ஆம் ஆண்டு வரை உலகின் மிக வேகமாக வளரும் முக்கிய நகரமாக பெங்களூரு தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் குறியீடு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி, இடம் பெயர்வு மற்றும் செல்வ விரிவாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் 245 உலகளாவிய நகரங்களை ஆய்வு செய்தது.
அதன் வலுவான திறமையாளர்கள் மற்றும் உலகளாவியத் திறன் மையங்கள் (GCCs) காரணமாக பெங்களூரு முதலிடத்தைப் பிடித்தது.
உலகளாவியத் திறன் மையங்கள் (GCCs) என்பவை தொழில்நுட்பம், நிதி மற்றும் செயல்பாடுகளுக்கான பன்னாட்டு நிறுவனங்களின் கடல் கடந்த மையங்களாகும்.
இந்தத் தரவரிசையில் உள்ள முதல் 20 வேகமாக வளரும் நகரங்களில், ஆசியா-பசிபிக் நகரங்கள் கிட்டத்தட்ட 85% இடங்களைப் பிடித்துள்ளன.