ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் வளர்ச்சி மாநாட்டு அமைப்பின் (UNCTAD) 2021 ஆம் ஆண்டிற்கான மேம்பாடு மற்றும் உலகமயமாக்கல் உண்மைகள் மற்றும் புள்ளி விவரங்கள் அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையின்படி,
வளர்ந்து வரும் சிறுதீவு நாடுகளின் சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் கோவிட்-19 பெருந்தொற்றானது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வளர்ந்து வரும் சிறுதீவு நாடுகள் (Small Islands Developing States – SIDS) பெரும்பாலும் சுற்றுலாவையே சார்ந்திருப்பதால் கோவிட் – 19 பாதிப்பு இந்த நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற வளர்ந்து வரும் நாடுகளை விட SIDS நாடுகள் வெளிப்புற பொருளாதாரம் மற்றும் நிதி தாக்கங்களால் 35% அதிகம் பாதிக்கப்படக் கூடியவையாகும்.