வளிமண்டல ஆக்ஸிஜன் இல்லா உந்து விசைத் தொழில்நுட்பம்
March 12 , 2021 1524 days 659 0
சமீபத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (DRDO - Defence Research and Development Organisation) வளிமண்டல ஆக்ஸிஜன் பயன்பாடு இல்லாத உந்து விசைத் தொழில்நுட்பத்தைச் சோதனை செய்துள்ளது.
இந்த வடிவமைப்பானது மும்பை நிலப் பகுதியில் சோதனை செய்யப்பட்டது.
இது இந்தியக் கடற்படையைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் நிலப் பகுதிகளுக்குச் சென்று தங்களது மின்கலத்திற்கு மின்னேற்றம் செய்யாமலேயே 3 வார காலத்திற்கு இயங்க அனுமதிக்கின்றது.
AIP (Air Independent Propulsion) தொழில்நுட்பத்தின் மேம்பாடானது ஆத்ம நிர்பர் பாரத் பிரச்சாரத்திற்கான ஒரு மிகப்பெரிய ஊக்கமளிப்பாகும்.
அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் ரஷ்யா, ஆகிய நாடுகள் மட்டுமே இந்த முக்கியத் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன.
DRDOவின் AIP தொழில்நுட்பமானது பாஸ்பாரிக் அமில எரிபொருள் கலத்தை (Phosphoric Acid Fuel Cell) அடிப்படையாகக் கொண்டதாகும்.
கடைசி 2 கல்வாரி வகுப்பைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் இதனால் இயக்கப் பட இருக்கின்றன.