வழக்குதாரர்களின் சுயாட்சிக் கோட்பாடு வரம்பற்றது அல்ல என்றும், மேலும் அது நடுவர் மன்றத்தின் அடிப்படை என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
சச்சரவுகளைத் தீர்க்கும் செயல்முறையைத் தேர்ந்தெடுக்கும் வழக்குதாரர்களின் சுதந்திரம் வழக்குதாரர் சுயாட்சி என்று அழைக்கப்படுகிறது.
இது சட்டங்கள், நடுவர் செயல்முறை மேற்கொள்வதற்கான இடம், நடுவர்களைத் தேர்ந்தெடுப்பது போன்றவற்றைத் தீர்மானிக்கும் சுதந்திரத்தை வழக்கு தாரர்களுக்கு வழங்குகிறது.
2021 ஆம் ஆண்டில், "வழக்குதாரர்களின் சுயாட்சி என்பது நடுவர் மன்றத்தின் வழிகாட்டும் கொள்கை" என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தக் கருத்து ஆனது நியூயார்க் உடன்படிக்கை மற்றும் 1996 ஆம் ஆண்டு இந்திய நடுவர் மற்றும் சமரச சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.