வாகனங்களுக்கான மூங்கில் அடிப்படையிலான சுற்றுச்சூழல் கலவை
July 30 , 2025 126 days 161 0
கௌஹாத்தியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், நெகிழிக்கான மாற்றாக பம்புசா துல்டா மற்றும் மக்கும் தன்மை கொண்ட உயரி பலபடி சேர்மங்களைப் பயன்படுத்தி மூங்கில் பலபடி சேர்மக் கலவையை உருவாக்கியது.
வாகனத்தின் முகப்பு பகுதிகள், கதவு தகடுகள் மற்றும் இருக்கை மெத்தைகள் போன்ற வாகன உட்புற கூறுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கலவையானது அதிக வலிமை, வெப்ப நிலைத்தன்மை மற்றும் குறைந்த ஈரப்பதம் உறிஞ்சும் தன்மையினைக் கொண்டுள்ளது.
மூங்கில் இழைகள் மற்றும் உயிரி அடிப்படையிலான அல்லது பெட்ரோலிய அடிப்படையிலான எபோக்சி பாலிமர்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நான்கு உருவாக்கங்கள் ஆனது நீடிப்புத் தன்மை, நீர் எதிர்ப்பு திறன் மற்றும் செலவு உள்ளிட்ட 17 அளவுருக்களில் சோதிக்கப்பட்டன.
இந்தச் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள் ஆனது மின்னணுவியல், மரச்சாமான்கள், பொதி கட்டுதல் மற்றும் நிலையான கட்டுமானத்தில் சாத்தியமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.