மெக்சிகோவின் மோசமான சட்ட அமலாக்கம் ஆனது, வாகிடா போர்போயிஸின் உடனடி அழிவுக்கு (உலகளவில் 10 மட்டுமே எஞ்சியுள்ளதுடன்) வழிவகுத்தது.
கலிபோர்னியா வளைகுடாவில் டோட்டோபா மீன்களை குறிவைத்து மேற்கொள்ளப் படும் சட்டவிரோத கில்நெட் மீன்பிடித்தலில், வாகிடாக்கள் தற்செயலாக சிக்குவதால் அது இந்த இனங்களுக்கு முக்கிய அச்சுறுத்தலாக உள்ளது.
2020 ஆம் ஆண்டு முதல் இந்த மீன்பிடி கருவிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட போதிலும், மீன்பிடி நடவடிக்கைகள் முந்தைய நிலைகளிலேயே தொடர்வது மட்டுமல்லாமல் மெக்சிகோவில் சட்ட அமலாக்கம் பலவீனமாகவே உள்ளது.
வாகிடா போர்போயிஸ் (ஸ்பானிய மொழியில் சிறிய பசு எனப்படும்) 1958 ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகவும் அருகி வரும் கடல் வாழ் பாலூட்டி ஆகும்.
இது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் மிகவும் அருகி வரும் இனமாகப் பட்டியலிடப் பட்டுள்ளது.