பாராளுமன்றத் தேர்தலோ (அ) மாநில சட்டமன்றத் தேர்தலோ என எதுவாயினும் அதில் வாக்களிப்பு குறித்த ரகசியம் காப்பது அவசியமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2013 ஆம் ஆண்டின் குடிமக்கள் சுதந்திரத்திற்கான வழக்கு (2013 Civil Liberties case) என்ற வழக்கின் தீர்ப்பை மீண்டும் அது வலியுறுத்தி கூறியுள்ளது.
ரகசியம் காப்பது என்பது கருத்துச் சுதந்திரம் எனும் அடிப்படை உரிமையின் ஓர் அங்கம் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் ஜனநாயகம் மற்றும் சுதந்திரமான தேர்தல் ஆகியவை அரசியலமைப்பின் அடிப்படை அமைப்பினுடைய அங்கங்கள் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
அடிப்படை அமைப்பு எனும் கொள்கையானது 1973 ஆம் ஆண்டின் கேசவானந்தா பாரதி எதிர் கேரள மாநில அரசு என்ற வழக்கின் தீர்ப்பில் உருவாக்கப்பட்டது.
வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல் அல்லது கள்ள ஓட்டு போன்றவை ஜனநாயகத்திற்கு எதிரான குற்றங்கள் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.