வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பிற்கான விழிப்புணர்வு மாற்றத் திட்டம்
September 2 , 2023 729 days 325 0
இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஆனது, 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கும் முயற்சியில், தனது வழக்கமான வாக்காளர் விழிப்புணர்வு திட்டத்தினை மாற்றியமைத்துள்ளது.
2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தேசியச் சராசரியை விட குறைவாகவோ அல்லது சற்று அதிகமாகவோ வாக்குப் பதிவு நடைபெற்ற 10 பெரிய மாநிலங்களில் அதிக கவனம் செலுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் கீழ், அந்தந்த மாநிலச் சராசரியை விட குறைவாக இருந்த சுமார் 250 தொகுதிகளிலும் அதிக கவனம் செலுத்தப் படுகிறது.
இந்தத் திட்டமானது 2019 ஆம் ஆண்டில் சுமார் 67.4% ஆக இருந்த சராசரி வாக்காளர் பங்கேற்பினை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.