TNPSC Thervupettagam

வாக்காளர் விழிப்புணர்வு மன்றங்கள்

January 14 , 2019 2822 days 1900 0
  • புதுதில்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் விழிப்புணர்வு மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
  • வாக்காளர் விழிப்புணர்வு மன்றங்கள் என்பது விவாதங்கள், வினாடி வினா, போட்டிகள் மற்றும் இதர ஈடுபடுத்தும் நடவடிக்கைகள் மூலமாக தேர்தல் முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற ஒரு முறைசாராத மன்றங்களாகும்.
தேர்தல் எழுத்தறிவு சங்கம்
  • இது இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் எழுத்தறிவு சங்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • 2018-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி 8வது தேசிய வாக்காளர் தினத்தின் போது ஆரம்பிக்கப்பட்ட இது ஒவ்வொரு கல்வி நிலையத்திலும் தேர்தல் எழுத்தறிவு சங்கத்தை ஏற்படுத்த எண்ணுவதோடு மட்டுமல்லாமல், யாரெல்லாம் முறைசார் கல்வி அமைப்பிற்கு வெளியில் உள்ளார்களோ அவர்களுக்கு எழுத்தறிவூட்ட ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் சுனாவ் பாத்சாலா எனும் வாக்குச் சாவடிப் பாடசாலையை அமைக்கவும் எண்ணுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்