வானியல் மற்றும் வானியற்பியல் தொடர்பான 15வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி
August 25 , 2022 1086 days 640 0
ஜார்ஜியாவின் குட்டாசி நகரில் நடைபெற்ற 15வது சர்வதேச வானியல் மற்றும் வான் இயற்பியல் (IOAA)-2022 ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி ஐந்துப் பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தப் போட்டியில் இந்தியாவில் இருந்து மொத்தம் ஐந்து மாணவர்கள் கலந்து கொண்டு ஒவ்வொருவரும் பதக்கம் வென்றுள்ளனர்.
இப்போட்டியில் மாணவர்கள் 3 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
பதக்கப் பட்டியலில் சிங்கப்பூருடன் இணைந்து இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
இந்திய அணியானது ஈரான் அணி (5 தங்கம்) மற்றும் கெஸ்ட் அணி (4 தங்கம், 1 வெள்ளி) ஆகியவற்றுக்குச் சற்றே பின் தங்கியுள்ளது.
ராகவ் கோயல் மிகவும் சவாலான ஒரு தத்துவார்த்தக் கேள்விக்கான சிறந்தப் பதிலை வழங்கியதற்காக ஒரு சிறப்புப் பரிசை வென்றார்.
வானியல் மற்றும் வானியற்பியல் தொடர்பான சர்வதேச ஒலிம்பியாட் போட்டி என்பது ஒரு வருடாந்திரப் போட்டியாகும்.
மேலும், இது ‘சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட்’ போட்டிகளில் ஒன்றாகும்.