இந்தியாவானது அமெரிக்கா, கனடா, பிரான்சு, ஜெர்மனி, ஐக்கிய இராஜ்ஜியம், மாலத் தீவுகள் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஆப்கானிஸ்தான் மற்றும் பக்ரைன் போன்ற 10 நாடுகளுடன் வான்வெளிக் குமிழி ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளது.
இது இந்தியா மற்றும் இதர நாடுகளுக்கிடையேயான ஒரு இருதரப்பு ஒப்பந்தமாகும்.
வான்வெளிக் குமிழி என்பது கோவிட் – 19 நோய்த் தொற்றின் காரணமாக தடை செய்யப் பட்டுள்ள வழக்கமான சர்வதேச விமான சேவைகளின் போது தங்களது தேசிய விமானங்கள் மற்ற நாடுகளுக்கும் மற்ற நாடுகளின் விமானங்கள் தங்களது நாட்டிற்கும் பறக்க அனுமதிக்கும்
ஆனால் வந்தே பாரத் திட்டத்தில் இந்தியப் பயணிகள் விமானங்கள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப் பட்டன.