நாசாவின் வாயேஜர் 1விண்கலம் பூமியிலிருந்து ஓர் ஒளி-நாள் (light-day) தொலைவை எட்டும் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் விண்கலமாக மாற உள்ளது.
ஓர் ஒளி-நாள் என்பது 24 மணி நேரத்தில் ஒளி பயணிக்கும் தூரமாகும்; இது சுமார் 26 பில்லியன் கிலோமீட்டர்களுக்குச் சமமாகும்.
வெளிப்புறக் கோள்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களை ஆய்வு செய்வதற்காக 1977 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 அன்று தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்தால் (NASA) வாயேஜர் 1 ஏவப்பட்டது.
சூரியனின் தாக்கத்திற்கு அப்பாற்பட்ட பகுதியான விண்மீன்களுக்கு இடையேயான விண்வெளியில் தனது பயணத்தைத் தொடர்வதற்கு முன்பு, இது 1979 ஆம் ஆண்டில் வியாழன் கோள் மற்றும் 1980 ஆம் ஆண்டில் சனிக் கோள் ஆகியவற்றை பார்வையிட்டது.
வாயேஜர் 1 விண்கலம் 2012 ஆம் ஆண்டில் விண்மீன்களுக்கு இடையேயான விண்வெளியில் நுழைந்தது; தற்போது சூரிய குடும்பத்திலிருந்து வெகு தொலைவில் பயணித்து வருகிறது.
ஒரு ஒளி-ஆண்டு தூரத்தைக் கடக்க இதற்கு இன்னும் 18,000 ஆண்டுகள் ஆகும் என்றும், மற்றொரு நட்சத்திரத்திற்கு அருகிலுள்ள தூரத்தை அடைய இன்னும் அதிக காலம் எடுக்கும் என்றும் நாசா மதிப்பிட்டுள்ளது.