நிம்சுலைடு மருந்தின் 100 மில்லி கிராமிற்கு மேலான அளவிலான வாய்வழி உட்கொள்ளும் மருந்து தயாரிப்பிற்கான சூத்திரங்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்தை மத்திய அரசு தடை செய்துள்ளது.
இது வலி, காய்ச்சல் மற்றும் வீக்கத்திற்கு என்று பரிந்துரைக்கப்படும் பொதுவாகப் பயன்படுத்தப் படும் ஸ்டெராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்து (NSAID) ஆகும்.
1940 ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டத்தின் 26A பிரிவின் கீழ் இந்தத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரிவு 26A ஆனது, நோயாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் மருந்துகளை கட்டுப்படுத்தவோ அல்லது தடை செய்யவோ மத்திய அரசிற்கு அதிகாரம் அளிக்கிறது.