வாராக்கடன்கள், மோசடி விவகாரங்கள் மற்றும் தணிக்கைக்கான RBI குழு
February 23 , 2018 2781 days 959 0
வாராக்கடன்களின் வகைப்பாடு, தணிக்கை செய்முறையின் செயல்திறன் மற்றும் அதிகரிக்கும் மோசடி சம்பவங்கள் போன்றவை தொடர்பான பல்வேறு விவகாரங்களை ஆராய்வதற்காக இந்திய ரிசர்வ் வங்கி நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குநர் குழுவின் முன்னாள் உறுப்பினரானH.மலேகாம் (V.H.Malagam) இந்த நிபுணர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
RBI-ன் நிர்வாக இயக்குநரானK.மிஸ்ரா இக்குழுவின் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் நிதி மோசடிகளை தவிர்ப்பதற்கான கண்காணிப்பு கட்டமைப்பினை (Supervisory Framework) வலுப்படுத்துவதற்கான RBI-ன் ஓர் முன்னெடுப்பாகவும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற SWIFT (உலகளாவிய வங்கிகளுக்கிடையேயான நிதியியல் தொலை தொடர்புக்கான சங்கம் - Society for worldwide Interbank Financial Telecommunication - SWIFT) தொடர்பான 11,400 கோடி மோசடியினால் உண்டான விழிப்பாலும் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.