TNPSC Thervupettagam

வாலாஜா பெரிய பள்ளிவாசல்

March 15 , 2026 14 hrs 0 min 56 0
  • ஆற்காடு இளவரசர் அறக்கட்டளையினால் பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகளுக்குப் பிறகு, வரலாற்றுச் சிறப்புமிக்க வாலாஜா பெரிய மசூதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
  • வாலாஜா பெரிய மசூதி திருவல்லிக்கேணி பெரிய மசூதி என்றும் அழைக்கப் படுகிறது என்பதோடு இது சென்னையின் திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க மசூதியாகும்.
  • இது முதலில் 1795 ஆம் ஆண்டு ஆற்காடு இளவரசரின் முன்னோரும், கர்நாடக நவாபுமான முகமது அலி வாலாஜாவால் கட்டப்பட்டது.
  • இந்த மசூதியானது மரம் அல்லது எஃகு எதுவும் பயன்படுத்தப்படாமல், முழுமையாக கருங்கற்களால் கட்டப்பட்டது.
  • இது முகலாயக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டது என்பதோடு இதில் இரண்டு மினாரட்கள் / கோபுரங்கள் உள்ளன இருப்பினும் இது ஒரு குறிப்பிட்ட நிலையான கட்டிடக்கலை வடிவமைப்பைப் பின்பற்றவில்லை.
  • மசூதியின் முன்புறம் காயிதே மில்லத் எம். முகமது இஸ்மாயில் சாஹிப் அவர்களின் நினைவிடம் அமைந்துள்ளது.
  • முகமது அலி கான் வாலாஜா 1749 ஆம் ஆண்டு தன்னை நவாபாக அறிவித்துக் கொண்டார் ஆனால் அவரது பதவி சந்தா சாஹிப்பால் எதிர்க்கப்பட்டது.
  • 1752 ஆம் ஆண்டில், பல மோதல்களுக்குப் பிறகு, சந்தா சாஹிப்பின் படைகளும் அவரது பிரெஞ்சு கூட்டாளிகளும் ஆற்காட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
  • முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலமின் அங்கீகாரத்துடன், 1765 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 அன்று வாலாஜா அதிகாரப்பூர்வமாக நவாபாக அறிவிக்கப்பட்டார்.
  • அவர் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் கூட்டாளியாக இருந்தார் மற்றும் சந்தா சாஹிப்பிற்கு எதிரான கர்நாடகப் போர்களில் அவர்களுக்கு ஆதரவளித்தார்.
  • ஆற்காடு இளவரசர் அறக்கட்டளையின் பல மாத புனரமைப்புக்குப் பிறகு, மசூதி பொது மக்களின் பயன்பாட்டிற்காக மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்