நாசாவானது அதன் அதிபரவளைய மற்றும் புவிக்குத் திரும்ப இயலாத ஒரு சுற்றுப்பாதையால் நன்கு உறுதிப்படுத்தப்பட்ட 3I/ATLAS எனப்படும் ஒரு புதிய விண்மீன் மண்டல வால் நட்சத்திரத்தினைக் கண்டறிந்துள்ளது.
இந்தக் கண்டுபிடிப்புக்கு முந்தையப் படங்கள் ஆனது உலகெங்கிலும் உள்ள ATLAS ஆய்வகங்கள் மற்றும் கால்டெக்கின் ஸ்விக்கி மாறுநிலை பேரண்ட ஆய்வு மையத்தில் இருந்து (டிரான்சியன்ட்) பெறப்பட்டன.
இந்த வால் நட்சத்திரத்தின் பாதையானது அது சூரிய மண்டலத்திற்கு அப்பால் இருந்து தோன்றியதைக் காட்டுகிறது.
இது சுமார் 1.8 வானியல் அலகுகளுக்கு (சுமார் 170 மில்லியன் மைல்கள் அல்லது 270 மில்லியன் கிலோமீட்டர்கள்) அப்பாலான தொலைவில் உள்ளதால் பூமிக்கு எந்த ஒரு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது.
இந்த 3I/ATLAS என்பது 'ஓமுவாமுவா மற்றும் 2I/போரிசோவ்' ஆகியவற்றிற்குப் பிறகு, விண்மீன் மண்டலத்தில் அறியப்பட்ட மூன்றாவது பொருள் ஆகும்.