வாழ்நாள் சாதனையாளர் விருது - உஸ்தாத் அம்ஜாத் அலிகான்
November 23 , 2018 2427 days 735 0
இந்தியாவின் புகழ்மிக்க சாரோட் வல்லுநர்களில் ஒருவரான உஸ்தாத் அம்ஜாத் அலிகானுக்கு வாழ்நாள் சாதனைக்கான சுமித்ரா சாரட் ராம் என்ற விருது புதுடெல்லியின் கமாமினி அரங்கில் வழங்கப்பட்டது.
இது இந்திய பாரம்பரிய இசை வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக இவரின் மகத்தான பங்களிப்பிற்காக வழங்கப்பட்டது.
இவர் ஏற்கனவே கீழ்க்கண்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
சங்கீத நாடக அகாதமியின் விருது
யுனெஸ்கோ விருது
யுனிசெப்பின் தேசிய தூதுவருக்கான விருது
ஜப்பானின் புகுவோ பெருமைமிகு கலாச்சார பரிசு மற்றும்
‘கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் லெட்டர்ஸ்’ என்ற பிரான்ஸ் நாட்டின் விருது
1945-ல் குவாலியரில் பிறந்த இவர் 2001 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதினைப் பெற்றார்.
இந்த விருதானது ஸ்ரீராம பாரதிய கலா கேந்திராவின் நிறுவரான சுமித்ரா சாரட் ராமின் பெயரால் வழங்கப்படுகிறது.