- மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சரான ஹர்தீப் சிங் பூரி அவர்கள் வாழ்வாதார எளிமையாக்கல் குறியீடு – 2020 என்பதின் இறுதித் தரவரிசையை அறிவித்துள்ளார்.
- வாழ்வாதார எளிமையாக்கல் குறியீடு 2020 என்பதின் கீழ் தரவரிசையானது 1 மில்லியனுக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்டுள்ள நகரங்கள் மற்றும் 1 மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்டுள்ள நகரங்கள் ஆகியவற்றிற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2020 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த கள ஆய்வுச் சோதனையில் 11 நகரங்கள் பங்கேற்றன.
- மில்லியன்+ பிரிவில் சிறப்பான செயல்பாடு கொண்ட நகரமாக பெங்களூரு நகரம் உருவெடுத்துள்ளது.
- மில்லியனுக்கும் குறைவான மக்கள் உள்ள பிரிவில், சிம்லா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
- வாழ்வாதார எளிமையாக்கல் குறியீடு (EoLI) என்பது வாழ்க்கைத் தரம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டிற்கான பல்வேறு முன்னெடுப்புகளின் தாக்கங்களை மதிப்பிடுவதற்கான ஒரு ஆய்வுக் கூறாகும்.
- இது வாழ்க்கைத்தரம், பொருளாதாரத் திறன் (நகர்), அதன் நிலைப்புத் தன்மை மற்றும் தாங்குதன்மை அடிப்படையில் இந்தியா முழுவதும் பங்கு பெற்ற நகரங்களின் ஒரு விரிவான புரிதலை அளிக்கின்றது.
நகராட்சி செயல்பாட்டுக் குறியீடு (MPI)
- EoLI குறியீட்டைப் போன்று, MPI 2020 என்பதின் கீழ் ஆய்வுச் செயல்திட்டமானது நகராட்சிகளில் உள்ள மக்கள்தொகையின் அடிப்படையில், அவற்றை வகைப்படுத்தி உள்ளது.
- அவை மில்லியன்+ (மில்லியன் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள நகராட்சிகள்) மற்றும் மில்லியனுக்கும் குறைவாக உள்ள நகராட்சிகள் என்று வகைப்படுத்தப் பட்டு உள்ளன.
- MPI குறியீட்டின் “மில்லியனுக்கும் குறைவாக உள்ள மக்கள் தொகைப் பிரிவில்” புதுதில்லி நகராட்சி ஆணையம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
- மில்லியன் + மக்கள் தொகைப் பிரிவில் MPI குறியீட்டில் இந்தூர் முதல் இடத்தைப் பிடித்து உள்ளது.

