வாஹன் என்பது டிஜிட்டல் முறையில் வாகனங்கள் பதிவு செய்யப்படும் தேசிய அளவிலான தளமாகும்.
இது நிறம், ஆற்றல், வணிகர், அடிச்சட்டக எண் மற்றும் எரிவாயு வகை உள்ளிட்ட 28 வகையான வாகனங்களின் தரவுகளை கொண்டிருக்கின்றது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகமானது இந்தத் தரவுகளை தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளது.
இது இந்தத் தகவல்களைப் பின்வரும் நிறுவனங்களால் மட்டுமே பயன்படுத்த முடியும்.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள்
50 சதவிகித நிறுவன பங்கினை இந்தியர்கள் கொண்டிருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும்.
நிறுவனங்களால் அணுகக்கூடிய இதுபோன்ற அனைத்துத் தகவல்களும் இந்தியாவில் உள்ள தகவல் வழங்கும் அமைப்பில் (Server) சேமிக்கப்பட வேண்டும்.
வணிகப் பயன்பாட்டிற்காக இதுபோன்ற தகவல்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் ஆண்டுக் கட்டணமாக ரூ.3 கோடியை செலுத்த வேண்டும்.