சமீபத்திய ஜனநாயக அறிக்கையானது ஸ்வீடன் நாட்டின் கோதன்பர்க் பல்கலைக் கழகத்தில் உள்ள வி-டெம் என்ற நிறுவனத்தினால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
‘ஜனநாயக அறிக்கை 2022: தன்னியக்கமயமாக்கல் (எதேச்சாதிகாரம்) இயற்கையை மாற்றுகிறதா?’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
சுதந்திர ஜனநாயகக் குறியீட்டின் மதிப்பெண்களின் அடிப்படையில் நாடுகளை நான்கு ஆட்சி வகைகளாக, தாராளவாத ஜனநாயகம், தேர்தல் ஜனநாயகம், தேர்தல் எதேச்சதிகாரம் மற்றும் சுதந்திரமற்ற எதேச்சதிகாரம் என்ற வகைகளில் இந்த அறிக்கை வகைப்படுத்துகிறது.
இது இந்தியாவை சுதந்திர ஜனநாயகக் குறியீட்டில் இடம் பெற்ற 179 நாடுகளில் 93வது இடத்தில் வகைப்படுத்துவதோடு இந்தியாவினைத் தேர்தல் எதேச்சதிகார நாடாகவும் வகைப்படுத்துகிறது.
உலகின் முதல் பத்து ‘எதேச்சதிகார நாடுகளில்' இந்தியாவும் ஒன்று என்று இந்த அறிக்கை கூறுகிறது.