கோத்ரேஜ் ஏரோஸ்பேஸ் நிறுவனமானது, ககன்யான் திட்டத்திற்காக முதல் மனித பயணப் பயன்பாட்டிற்காக மதிப்பீடு செய்யப்பட்ட விகாஸ் எஞ்சினை இஸ்ரோவிற்கு வழங்கியது.
இந்த எஞ்சின் இந்தியாவின் முதல் மனிதர்கள் மேற்கொள்ளும் விண்வெளிப் பயணத்திற்கான ஏவு வாகனமான LVM-3 ஏவு கலத்தின் L110 நிலைக்கு ஆற்றல் அளிக்கும்.
மனித பயணப் பயன்பாட்டிற்கான மதிப்பீடு ஆனது விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்வதற்கான மேம்பட்ட பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்கிறது.
ககன்யான் மூன்று இந்திய விண்வெளி வீரர்களை மூன்று நாட்கள் வரை புவி தாழ் மட்ட சுற்றுப்பாதையில் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கோத்ரேஜ் ஏரோஸ்பேஸ் நிறுவனமானது முன்பு PSLV, GSLV, LVM-3, மற்றும் சந்திரயான் மற்றும் மங்கள்யான் பயணங்களுக்கான கூறுகளுக்கான எஞ்சின்களைப் பங்களித்து உள்ளது.