TNPSC Thervupettagam

விக்டோரியா மண்டபத்தின் புதுப்பித்தல் பணிகள்

December 26 , 2025 10 days 82 0
  • சென்னையில் உள்ள விக்டோரியா மகாராணி பெயரிடப்பட்ட புணரமைக்கப்பட்ட விக்டோரியா பொது மண்டபத்தைத் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
  • இது 1888 ஆம் ஆண்டில் இந்திய-சாராசனிக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டது.
  • விக்டோரியா பொது மண்டபம் ஆனது புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் இராபர்ட் சிஷோல்ம் என்பவரால் வடிவமைக்கப்பட்டு நம்பெருமாள் செட்டி என்பவரால் கட்டப் பட்டு, கன்னிமரா பிரபுவால் பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப் பட்டது.
  • இந்த மண்டபம், 1916 ஆம் ஆண்டில் மாநிலத்தில் திராவிட அரசியலுக்கு வழி வகுத்த நீதிக்கட்சி உருவாக்கப்பட்ட இடமாகவும் இருந்தது.
  • சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட, துத்தரி, குழல், கின்னாரம், கொக்கரை மற்றும் இதர சிலவற்றை உள்ளடக்கிய சுமார் 120 இசைக்கருவிகளும் இங்கு காட்சிப் படுத்தப் பட்டன.
  • இந்தப் பணிகள் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்