குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் அவர்கள் ‘விக்யான் சர்வத்ரா பூஜ்யதே திட்டத்தினை’ (Vigyan Sarvatra Pujyate programme) தொடங்கி வைத்தார்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகமானது இத்திட்டத்தினை அமல்படுத்துவதற்காக வேண்டி மத்தியப் பிரதேசத்தில் 3 கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்துள்ளது.
இது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் மற்றும் விரிவுரைகள் அடங்கிய ஒரு வார கால அளவிலான தேசிய அளவில் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு திட்டமாகும்.
இந்தத் திட்டமானது தினசரிப் பயன்பாட்டுப் பொருட்கள் பற்றிய அறிவியல்பூர்வ அறிவினை நோக்கி மாணவர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.