ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) நிறுவனம் இந்தியாவின் முதல் தனியார் சுற்றுப்பாதை ஏவுகலமான விக்ரம்-1 ஐ ஏவுவதற்குத் தயாராகி வருகிறது.
இந்த ஏவுகலன் 300 கிலோ வரையிலான செயற்கைக்கோள்களை தாழ் புவிவட்ட சுற்றுப் பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்ற நிலையில்இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்படும்.
இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாய் அவர்களின் நினைவாக இந்த ராக்கெட்டிற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் தனியார் துணை சுற்றுப்பாதை ஏவுகலமான விக்ரம்-S ஐ வெற்றிகரமாக ஏவியது.