TNPSC Thervupettagam
September 7 , 2025 4 days 48 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பினால் (ISRO) முழுமையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விக்ரம் 3201 என்ற அதன் முதல் 32-பிட் நுண்செயலாக்கச் சில்லினை / கருவியை இந்தியா அறிமுகம் செய்தது.
  • இந்தச் சில்லானது/சிப் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 02 ஆம் தேதியன்று டெல்லியில் நடைபெற்ற ஒரு குறைக்கடத்தி தொழில்துறை நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 'விக்ரம் 3201' என்பது 2009 ஆம் ஆண்டு முதல் இஸ்ரோவால் பயன்படுத்தப்படும் 'விக்ரம் 1601' செயலியின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும்.
  • இந்தச் செயலியானது செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி அமைப்புகளில் பயன்படுத்தப் படும் அடா நிரலாக்க மொழியை ஆதரிக்கிறது.
  • உள்ளார்ந்த விண்வெளிப் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இது, மைனஸ் 55 முதல் 125 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தில் செயல்படும் திறன் கொண்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்