விக்ஸித் பாரத் சிக்சா அதிஷ்டான் மசோதா இந்தியாவில் உயர்கல்விக்கு ஒற்றை ஒழுங்குமுறை ஆணையத்தை முன்மொழிகிறது.
இது ஒழுங்குமுறைகளை எளிதாக்குதல், பல அமைப்புகளுக்கு இடையேயான இடையீடுகளைக் குறைத்தல் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மசோதாவில் தரநிலைகளை அமைத்தல், அங்கீகாரம் மற்றும் நிதியுதவிக்கான கட்டமைப்புகள் உள்ளன.
இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் மற்றும் இந்திய அறிவியல் கல்வி நிறுவனங்கள் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் சேர்க்கப் படும்.
இந்த நிறுவனங்கள் வரலாற்று ரீதியாக உயர் தரச் சட்டப்பூர்வ அந்தஸ்து மற்றும் கல்வி சார் சுயாட்சியை அனுபவித்துள்ளன.
ஒரே சீரான தரநிலைகள் கல்வி நெகிழ்வுத்தன்மை மற்றும் புதுமைகளைக் கட்டுப்படுத்தக் கூடும் என்ற கவலைகள் உள்ளன.
இந்த மசோதா இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள் அல்லது இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களின் உள் நிர்வாக கட்டமைப்புகளை முறையாகத் திருத்த வில்லை.
இந்தச் சீர்திருத்தம் முதன்மையான நிறுவனங்களில் சிறப்பினைப் பேணுவதுடன் ஒழுங்குமுறை ஒருங்கிணைப்பினை மேற்கொள்வதையும் சமநிலைப்படுத்துகிறது.