விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 28வது தேசிய இணைய ஆளுகை மாநாடு (NCeG) விசாகப்பட்டினம் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் நிறைவடைந்தது.
இந்த மாநாட்டை நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறை தீர்ப்புத் துறை (DARPG), மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மற்றும் ஆந்திரப் பிரதேச அரசு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்தன.
BHASHINI மற்றும் டிஜி யாத்ரா போன்ற தளங்களைப் பயன்படுத்திச் செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும், குடிமக்களை மையமாகக் கொண்ட மற்றும் பன்மொழியிலான டிஜிட்டல் சேவை வழங்கலுக்கு இது அழைப்பு விடுத்தது.
SAMPADA 2.0, eKhata மற்றும் DAMS போன்ற வெற்றியடைந்த மாதிரிகள் முழு அரசாங்க அணுகுமுறையின் கீழ் நாடு தழுவிய பயன்பாட்டிற்காக முன்மொழியப்பட்டன.